கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Thursday, 17 February 2011

அந்த எண் என்ன?

கொஞ்சம் எளிமையான கேள்வி இது:

ஒரு மூன்று இலக்க எண். 
முன்னூறை  விட சிறியது
ஒற்றைப்படையில் இருக்கிறது. 
ஐந்தால் வகுபடும். 
முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது. 
ஒரே ஒரு இலக்க எண் மட்டுமே இரட்டைப்படையில் இருக்கும்.
மூன்று இலக்கங்களையும் கூட்டினால் எட்டு வரும்.

அந்த எண் என்ன?


Monday, 7 February 2011

கண்டுபிடிங்க, பார்க்கலாம்





இந்த முறை இரண்டு கணக்குகள் (கொஞ்சம் ஜுஜுபி தான்)

1. உங்களிடம் ஆயிரம் ரூபாயும் பத்து பைகளும் இருக்கின்றன. இந்த ஆயிரம் ரூபாயை இந்தப் பைகளில் வைக்க வேண்டும். கண்டிஷன் என்னன்னா, உங்ககிட்ட எத்தனை ரூபாய் கேட்டாலும் பைகளைத் திறந்து பார்க்காமல் கொடுக்க வேண்டும், எண்ணிப் பார்த்தால் கேட்ட தொகை இருக்க வேண்டும், எப்படி? (முழு ரூபாய்களாகத் தான் கேட்கப் படும், பைசாக்கள் வரும்படி கேட்கப் பட மாட்டாது)
2. ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன?