கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Monday, 10 January 2011

எண்களில் எத்தனை விஷயங்கள்?


முனுசாமி : 100 க்குள்  எத்தனை 9 கள் இருக்கின்றன ?
கந்தசாமி : ஒன்னே ஒண்ணுதான் அதாங்க 8 க்கு அப்புறம்.. பத்துக்கு முன்னாடி.
முனுசாமி : ஹா. ஹா.. அப்படி இல்லேப்பா... நான்சொன்னது 1 லேருந்து  100 வரைக்கு எண்ணில் எழுதினா எத்தனை தடவை '9 'ங்கற நம்பர எழுதவேணும்.. உதாரணம் '19 ' எழுதச்சே ஒரு தடவை '9' எழுதணும்.. அந்த மாதிரி..
கந்தசாமி : ஓ அப்படியா.. அதான் நீயே க்ளூ கொடுத்திட்டியே.. ரொம்ப ஈசி..
 9 ல ஒரு 9
 19 ல ஒரு 9
 29 ல ஒரு 9
 39 ல ஒரு 9
 49 ல ஒரு 9
 59 ல ஒரு 9
 69 ல ஒரு 9
 79 ல ஒரு 9
 89 ல ஒரு 9
 99 ல ஒரு 9  இல்லல்ல.. ரெண்டு..  அக மொத்தம் '11 '

முனுசாமி : இல்லப்பா  மொத்தம் '20 வரும்'
கந்தசாமி : அதெப்படி.. எல்லா '9 ' சொல்லிட்டேனே.. அட.. இரு..
ஆங்.. '90, 91, 92, 93, 94, 95, 96 97, 98', அட ஆமாம் மொத்தம் 20 வந்திடிச்சு.

முனுசாமி : அதே மாதிரி..  2,3,4,5,6,7 & 8  எல்லாமே 20 தடவை வரும்.
கந்தசாமி : '1' அந்த மாதிரி 20 தடவை வராதா ?
முனுசாமி :  '1 ', 20 தடவை '99 ' வரைக்கும் எழுதினா வரும்.. 100 வரைக்கும் எழுதினா அது 21 வது '1 ' ஆயிடும்.
கந்தசாமி : இவ்ளோ விஷயம் இருக்கா எங்களுகிட்டே ?
முனுசாமி : இன்னமும் இருக்கு..
1 லேருந்து 10000000000000 வரைக்கும் 'எண்ணில்' எழுதினா, அதுல
எத்தனை 2
எத்தனை 3
எத்தனை 4
எத்தனை 5
எத்தனை 6
எத்தனை 7
எத்தனை 8
எத்தனை 9
வரும் ? சொல்லு பாப்போம்....! கஷ்டமா இருக்குதா... நம்ம மத்தவங்களையும் கேட்டு பாத்துட்டு அப்புறமா, நா சரியான விடையச் சொல்லுறேன். ஓக்கேவா ?

30 comments:

பெசொவி said...

எனக்குத் தெரியும். ஆனா என்ன விடை வருமோ அவ்வளவு பைசாக்கள் (ருப்பாய் எல்லாம் வேணாம், பைசா போதும்) கொடுத்தா, பதில் சொல்றேன்.

அருண் பிரசாத் said...

எனக்கும் தெரியும்...மத்தவங்க சொல்லட்டும் அப்புறம் சொல்லுறேன்

எஸ்.கே said...

16000000000

எஸ்.கே said...

Spectrum ஊழல் கணக்கா அது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்கு தெரியும் ஆனா. நான் சொல்லமாட்டேன்....

கருடன் said...

விடை மிக எளிது. நான் தான் இந்த ப்ளாக் 20வது பளோவர். ஆனா ஏன் பாளோ பண்றேன் தெரியலை... :))

எஸ்.கே said...

2,000,000,000,000 இரண்டுகள், மூன்றுகள் நான்குகள் ஐந்துகள் ஆறுகள் ஏழுகள் எட்டுகள் ஒன்பதுகள்

செல்வா said...

//ஆங்.. '90, 91, 92, 93, 94, 95, 96 97, 98', அட ஆமாம் மொத்தம் 20 வந்திடிச்சு.//

ஹி ஹி ..!!

செல்வா said...

/விடை மிக எளிது. நான் தான் இந்த ப்ளாக் 20வது பளோவர். ஆனா ஏன் பாளோ பண்றேன் தெரியலை... :))
//

ஹய்யோ ஹய்யோ !

ம.தி.சுதா said...

எண்ணுக்குள் ஒரு விளையாட்டா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

Anonymous said...

நல்லா கணக்கு காட்டுறீங்க போங்க

Anonymous said...

நீங்க பிகர்கள நல்லா கணக்கு பன்னுவின்க்க போல

Madhavan Srinivasagopalan said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை --- கடையோட ஒனரே இப்படி சொன்னா, நாங்கலாம் எப்படி கடை நடத்துறது..

@ அருண் பிரசாத்
---- இதையே நீங்க பல இடத்துல சொல்லிக்கிட்டு திரியுறதா கேள்வி.. உண்மையா ?

@ yes.ke
i) No.. not 16000000000
ii) Spectrum means ?

@ வெறும்பய said...
"எனக்கு தெரியும் ஆனா. நான் சொல்லமாட்டேன்...."
----
நல்ல பாலிசி.. கீப் இட் அப்

Madhavan Srinivasagopalan said...

@ Terrr Pandian "ஆனா ஏன் பாளோ பண்றேன் தெரியலை... :))"//

அது.. அது... அது வந்து..
ஆண்டவன் சொல்றான்.. டெரர் செய்யுறான்... (பாலோ பன்னுரதச் சொன்னேன்)

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said...

2,000,000,000,000 இரண்டுகள், மூன்றுகள் நான்குகள் ஐந்துகள் ஆறுகள் ஏழுகள் எட்டுகள் ஒன்பதுகள் //

What ?

Madhavan Srinivasagopalan said...

செல்வா, மதி சுதா
உங்கள் வருகைக்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

@ ஆர்.கே.சதீஷ்குமார் //நல்லா கணக்கு காட்டுறீங்க போங்க //

என்னது கண்ணைக் கட்டுதா..
ஓ! சாரி.. கணக்கு காட்டுறேனா ? அதுக்குத்தான இந்த வலைப்பூவே !

Madhavan Srinivasagopalan said...

// A.சிவசங்கர் said...

நீங்க பிகர்கள நல்லா கணக்கு பன்னுவின்க்க போல //

கணக்குப் பண்ணுரதுக்குத் தானே பிகர்கள் (figures)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க கொடுத்த நம்பர்ல ஒரு ஜீரோவக் கட் பண்ணிட்டு, முன்னாடி உள்ள 1ஐ தூக்கிட்டு 2 போடுங்க... (அதான் மல்ட்டிப்ளை பை 20 அண்ட் டிவைட் பட் 100)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன சரியா? சரியா சொன்னவங்களுக்கு ஏதாவது உண்டா?

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Arun Prasath said...

எனக்கு கொஞ்சம் வேலை முடிச்சிட்டு வந்து சொல்றேன்

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
" நீங்க கொடுத்த நம்பர்ல ஒரு ஜீரோவக் கட் பண்ணிட்டு, முன்னாடி உள்ள 1ஐ தூக்கிட்டு 2 போடுங்க... (அதான் மல்ட்டிப்ளை பை 20 அண்ட் டிவைட் பட் 100) " //

For 10000000000000 -- what's ur answer ?

எஸ்.கே said...

2000000000000 இதுதானே பதில் இதை ஏற்கனவே சொன்னேனே?

Madhavan Srinivasagopalan said...

அதென்ன எஸ்.கே
ஆணைக்கு அர்ரம்னா
குதிரைக்கு குர்ரம்னு சொல்லுறது போலச் சொல்லுறீங்க.. ?

wrong, sorry.

எஸ்.கே said...

அப்போ தப்பா? சரி ஏதாவது க்ளூ கொடுங்களேன்!

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said... "அப்போ தப்பா? சரி ஏதாவது க்ளூ கொடுங்களேன்!"//

க்ளு : எத்தனை ஜீரோ இருக்குதோ அதுக்கேத்தா மாதிரி விடை வரும்.

Madhavan Srinivasagopalan said...

@ vidyasri1953 said...

GREAT...

Madan said...

13000000000000 (1,2,3...9)எண்கள் வரும் என்று நான் நினைக்கிறேன்.மதன்

vidyasri1953 said...

99 க்குள் எத்தனை 0,1,2,3,4,5,6,7,8,9, தடவை வரும் ?

முத‌ல் எண் இட‌த்தில் 10 வித‌மாக‌ 0 முதல் 9 வரை போடமுடியும்
இரண்டவது இட‌த்தில் 10 வித‌மாக 0 முதல் 9 வரை போடமுடியும்
மொத்தம் 10 X 10 = 100 இரட்டை எண்கள் உள்ளன (00 முதல் 99 வரை).

அதாவது 200 தடவைகள் 0 முதல் 9 எண்கள் உள்ளன.
200 ஐ 10 ல் வகுக்க 20 வரும்.
எனவே 00 முதல் 99 வரை ( 100 க்குள், 10 power 2) எல்லா எண்களும்,
0 முதல் 9 வரை, 2 X 10 power(2-1) அதாவது 20 முறை வரும்.

N இலக்க எண்ணிற்கு N X 10 power (N-1)

10 000 000 000 000 க்கு முந்திய எண் வரை 13 இலக்கங்கள் உள்ளன.

1 முதல் 9 எண்கள், ஒவ்வொன்றும் 13 X 10 power (13-1) முறைகள் வரும்.

விடை= 13 X 10 power(12)

J