கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Sunday, 13 March 2011

"நான்கு சின்ன புதிர்கள்.."- விடைகள்

முதலில் அனைவருக்கும் சாரி.. சென்ற முறை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களை
சீக்கிரம் வெளியிட முடியவில்லை.


விடைகள்:

புதிர் 1:
முதல் சுற்று:
க்ளூ: குறிப்புகளில் ஒன்று மட்டுமே சரியானது.
குறிப்புகள்:
தங்கம்- இந்த பெட்டியில் படம் உள்ளது.
வெள்ளி- இந்த பெட்டியில் படம் இல்லை.
இரும்பு- இந்த பெட்டியில் படம் இல்லை.

பதில்:
தங்கப் பெட்டியில் படம் இருக்கிறது (முதல் குறிப்பு சரியானது) என்றால் நமக்கு இரண்டு சரியான பதில் கிடைத்துவிடும் (தங்கம் & இரும்பு) எனவே க்ளூபடி அது தவறு. அதேபோல் படம் இரும்பு பெட்டியில் இருக்கிறது (மூன்றாவது குறிப்பு சரியானது) என்றால் மீண்டும் இரண்டு சரியான பதில் கிடைத்து விடும் (வெள்ளி & இரும்பு). அதுவும் தவறு. எனவே வெள்ளிப் பெட்டியில்தான் படம் உள்ளது.

இரண்டாவது சுற்று:
க்ளூ: குறிப்புகளில் ஒன்று சரி ஒன்று தவறு.
குறிப்புகள்:
தங்கம்- வெள்ளி பெட்டியில் படம் இல்லை.
வெள்ளி- இந்த பெட்டியில் படம் இல்லை.
இரும்பு- இந்த பெட்டியில் படம் உள்ளது.

பதில்:
இரும்பு பெட்டியில் படம் இருக்கிறது என்றால் நமக்கு மூன்று பதில்களும் சரியானதாகிவிடும், எனவே க்ளூபடி அது தவறு. அதேபோல் படம் வெள்ளிப் பெட்டியில் இருக்கிறது என்றால் எல்லா பதில்களும் தவறானதாகி விடும், அதுவும் தவறு. எனவே தங்கப் பெட்டியில்தான் படம் உள்ளது. (முதல் இரண்டு குறிப்புகள் சரியானது, முன்றாவது தவறானது)


புதிர் 2:
குறிப்புகள்:

1. சம்பவம் நடந்த அன்று A, B, C மூன்று பேருமே கடைக்கு வந்து போயுள்ளனர். வேறு யாரும் அன்று கடைக்கு வரவில்லை.
2. A எப்போது திருடப் போனாலும் ஒரு துணையுடன் தான் திருடப் போவான்.
3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.
4. குற்றவாளிகள் இரண்டு பேர் என்றால் அதில் நிச்சயம் A ஒருவராக இருப்பார்.
5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.

பதில்:
A குற்றவாளி என்றால் அவருக்கு துணை B அல்லது C-ஆக இருக்கும்.
அந்த துணை B என்றால் C நிரபராதி. ஆனால் 3 மற்றும் 5வது குறிப்பின் படி B மற்றும் C இருவரும் நிரபராதிகள் ஆகின்றன. எனவே Aவும் குற்றவாளியாக இருக்க முடியாது.

மூன்றாவது மற்றும் ஐந்தாவது குறிப்பின்படி Bயும் Cயும் சேர்ந்து நிரபராதிகளாகவோ குற்றவாளிகளாவோ இருக்கலாம். இருவரும் குற்றவாளிகள் என்றால், A நிரபராதி. ஆனால் குறிப்பு 4-ன் படி குற்றவாளிகள் இருவர் என்றால் அதில் நிச்சயம் A இருப்பார். மேலும் மூவரும் சேர்ந்தும் திருடியிருக்க முடியாது. ஏனெனில் A ஒரே ஒரு துணையுடன் மட்டுமே திருடப் போவான்.

அப்படியானால் கடைக்காரர் ராம்சாமி கடையில் திருடி போயிருப்பதாக பொய் சொல்லியிருக்கிறார். (இன்ஸ்யூரன்ஸ் கிளைம் பண்ண நினைத்திருக்கலாம்)

புதிர் 3:
குறிப்புகள்

செல்வா சொன்னது: “குதிரையின் நிறம் கருப்பாக இருக்காது”
அருண் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை அல்லது சிவப்பாக இருக்கும்”
ரமேஷ் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை”
அப்போது வெங்கட் சொன்னார் ”நீங்கள் மூவர் சொன்னதில் ஒருவர் சொன்னது தப்பு ஒருவர் சொன்னது சரியானது.”
பதில் :
குதிரையின் நிறம் கருப்பு என்றால் மூவர் சொன்னது தவறாகி விடும். குதிரையின் நிறம் வெள்ளை என்றால் மூவர் சொன்னதும் சரியாகி விடும். எனவே குதிரையின் நிறம் சிவப்பு.

புதிர் 4:
இது என் அப்பாவின் ஒரே சகோதரியின் அண்ணன் பேரனின் தந்தையின் அப்பா” என்றார். அவருக்கு சகோதரர்கள் யாரும் இல்லை.

பதில் :
படத்திலிருப்பவர் படத்தை பார்ப்பவரின் அப்பா.

கலந்து கொண்ட அனைவருக்கும்  மிகுந்த நன்றிகள். 

7 comments:

எஸ்.கே said...

இப்புதிர்களை வெளியிட்டதற்கு பிஎஸ்வி மற்றும் மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி!

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மிகுந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்!

சமுத்ரா said...

good post! thank you

Dinesh said...

Good puzzles.

Better luck next time (for me!)

எஸ்.கே said...

தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

A.R.ராஜகோபாலன் said...

அன்பு மாதவன்
புதிய புதிர்கள்
கணக்கு கதிர்கள்
கணக்கும் போடலாம்
ஓ..........வும் போடலாம்

Madhavan Srinivasagopalan said...

//A.R.RAJAGOPALAN said...

அன்பு மாதவன்
புதிய புதிர்கள்
கணக்கு கதிர்கள்
கணக்கும் போடலாம்
ஓ..........வும் போடலாம்//

நீங்கள் போட்ட 'ஓ'விற்கு மிகுந்த நன்றிகள்

Anonymous said...

hi friend,
i think first one is wrong because 2nd and 3rd option are similar please see it.