ரொம்ப நாளாச்சு, அதுனால இரண்டு சின்னக் கேள்விகள்:
1. எட்டே எட்டு கோடுகளை வைத்து, இரண்டு சதுரங்களும், நான்கு முக்கோணங்களும் வரைய முடியுமா?
2. பத்து தென்னங்கன்றுகள் இருக்கின்றன. ஐந்து வரிசையில் வைக்க வேண்டும் ஆனால் ஒவ்வொரு வரிசையிலும் நான்கு கன்றுகள் இருக்க வேண்டும். எப்படி வைப்பீர்கள்?
சரியான விடையை சொன்ன மாதவனுக்கு வாழ்த்துகள்!
3 comments:
1) ஒரு சதுரம் வரையவும்.
அந்த சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவினையும் இணைக்குமாறு மற்றொரு சதுரம் வரையவும். இந்த சதுரம் முதலில் வரைந்த சதுரத்தை விட சிறியதாகவும், 45 டிகிரி திருப்பிவிடப் பட்டதாகவும் அமையும். தற்போது நான்கு முக்கோணங்களும் இரண்டு சதுரங்களும் கிடைத்துவிடும்.
2)கையை எடுக்காமல் வரையப் படும் ஐந்து முக நட்சத்திரம் வரையவும். இதில் ஐந்து நேர் கோடுகளும் ஒவ்வொரு கோடுகளில் நான்கு இணையப் புள்ளிகளும் வரும். மொத்தம் பத்து புள்ளிகள்தான் இருக்கும். ஒவ்வொரு புள்ளியும் தென்னை மரங்கள் வைப்பதற்கான இடமாகும்..
really tough. i am waiting for your answers.
@ Madhavan
Very good!
Post a Comment