கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Sunday, 16 January, 2011

ஒரு ஜாலி கணக்கு-விடைபொதுவாகவே கணக்கில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட சில புதிர்களை விரும்புவார்கள். அவற்றில் ஒன்று இது:-

பத்து இயந்திரங்கள் இருக்கின்றன. ஒன்பது இயந்திரங்கள் பத்து கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்க உதவுபவை. ஒரே இயந்திரம் மட்டும் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்கும்.

உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும் . உங்களிடம் ஒரு தராசு தரப்படும். ஒரே நிறுவையில் எந்த இயந்திரம் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

விடை-எஸ்கே, அனு, மற்றும் middleclassmadhavi ஆகியோர் விடையை சொல்லிவிட்டார்கள். ஆனால், ஒரு எலக்ட்ரானிக் இயந்திரம் அல்லது சுருள் தராசு (SPRING BALANCE ) பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் சொல்லவில்லை.

டிஸ்கி: அடுத்த புதிர் இன்று(19.01.2011) மாலை. கபர்தார்!

21 comments:

Madhavan Srinivasagopalan said...

யோசிக்க டயம் வேணும்.. வெயிட் பிளீஸ்..

எஸ்.கே said...

அதாவது அந்த 10 காசுகள் மற்றும் எடை போடும் தராசு இதை வச்சு எது அந்த 9 கிராம் கொண்ட காசுன்னு கண்டுபிடிக்கனும் இல்லையா?

எஸ்.கே said...

ஒரு தடவை எடை போட்டா இல்லை இரண்டு தடவை எடை போட்டு பார்க்கலாமா?

R.Gopi said...

ஹை...

இதுக்கு ஆன்சர் ரொம்ப ஈஸி..

புதன்கிழமை சாயங்காலம் சொல்றேன்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ எஸ்.கே

ஒவ்வொரு இயந்திரத்தில் இருந்தும் பத்து பத்து காசுகள் கொடுக்கப் படும். இவற்றையும் தராசையும் கொண்டு ஒரே நிறுவையில் சொல்ல வேண்டும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Madhavan Srinivasagopalan said...
யோசிக்க டயம் வேணும்.. வெயிட் பிளீஸ்..
//

வெயிட்டை வச்சுதான் கணக்கே, இதுக்கு வெயிட் பண்ணச் சொல்றீங்களா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//R.Gopi said...
ஹை...

இதுக்கு ஆன்சர் ரொம்ப ஈஸி..

புதன்கிழமை சாயங்காலம் சொல்றேன்..
//

@ all,

ஒரு வேளை, புதன்கிழமை நான் விடை எழுத மறந்துட்டா கோபிகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க!

ஆமினா said...

//யோசிக்க டயம் வேணும்.. வெயிட் பிளீஸ்..//

அனு said...

முதல் இயந்திரத்தில் இருந்து ஒரு காசு, இரண்டாவது இயந்திரத்தில் இருந்து இரண்டு காசு so on.. upto பத்தாம் இயந்திரத்தில் இருந்து பத்து காசு என்று எடுத்து தராசின் ஒரு பக்கத்தில் வைக்க வேண்டும்.. அதற்கு சமமான எடை கல்லை இன்னொரு பக்கம் வைத்து அளக்க வேண்டும்..

எடை எவ்வளவு க்ராம் குறைவாக எடை இருக்கிறதோ அந்த இயந்திரம் தான் odd man out.. (உதா) ஒரு க்ராம் குறைந்தால் முதல் இயந்திரம்.. ரெண்டு க்ராம் குறைந்தால் இரண்டாவது இயந்திரம் etc etc..

பி.கு: எடைக்கல் உபயோகிக்கலாம் என்றால் மட்டுமே இந்த விடை.. எடைக்கல் இல்லாமல் தான் பண்ணனும்னா இன்னும் யோசிக்கனும்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Anu
கிட்டத்தட்ட சரி, ஆனா எப்படி எடை குறைவான காசை கண்டுபிடிப்பீர்கள்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ anu

எடைக்கல் இல்லாமல் தான் பண்ணனும்

அனு said...

//உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும்//

அந்த காசு எந்த இயந்திரலிருந்து தயாரிக்கப்ப்பட்டது என்று தெரியுமல்லவா.. அதை வச்சு கண்டுபிடிச்சுக்கலாமே.. இல்ல, இதுல வேற உள்குத்து எதாவது இருக்கா??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ அனு
உங்க பதிலை இன்னும் கொஞ்சம் refine பண்ணுங்க, அவ்ளோதான்!

பாலராஜன்கீதா said...

இயந்திரங்களின் பெயர் 1 2 3 4 5 6 7 8 9 10 என வைத்துக்கொள்வோம்.
முதல் இயந்திரத்திலிருந்து 1 காசு
இரண்டாம் இயந்திரத்திலிருந்து 2 காசுகள்
மூன்றாம் இயந்திரத்திலிருந்து 3 காசுகள்
.
.
.
இதுபோல ஒன்பதாம் இயந்திரத்திலிருந்து 9 காசுகள் மற்றும்
10ஆம் இயந்திரத்திலிருந்து 10 காசுகள் எல்லாவற்றையும் ஒன்றாக நிறுத்து என்ன எடை என்று பார்க்கவும்
வரும் விடையை (10 + 20 + 30 ......+ 80 + 90 + 100) = 550லிருந்து கழிக்கவும்.
விடை 1 என்றால் முதல் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 2 என்றால் இரண்டாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 3 என்றால் மூன்றாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
.
.
.
விடை 9 என்றால் ஒன்பதாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 10 என்றால் பத்தாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்

எஸ்.கே said...

பதிலை இங்கே இணைத்துள்ளேன் பார்த்து சரிதானா என கூறவும்!

கணக்குப் புதிர் பதில்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ அனு, எஸ்கே & பாலராஜன் கீதா
கிட்டத்தட்ட உங்கள் விடை சரி, ஆனால் எப்படி எடை பார்ப்பீர்கள் என்பதை இன்னமும் சொல்லவில்லை, ஒரு தடவை மட்டுமே எடை பார்க்க வேண்டும்.

middleclassmadhavi said...

1-ம் எண் இயந்திரத்திலிருந்து ஒரு காசு, 2-ம் எண் இயந்திரத்திலிருந்து இரு காசுகள் இப்படி 10-ம் இயந்திரத்திலிருந்து 10 காசுகள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 55 காசுகளையும் தராசிலிட்டு நிறுத்து, 550 கிராமுக்கு எவ்வளவு குறைகிறது என்று பார்க்க வேண்டும். 1 கிராம் குறைந்தால், அந்த 9-கிராம் தயாரிக்கும் இயந்திரம் 1-ம் இயந்திரம் என்றும், 2 கிராம் குறைந்தால் - 2-ம் எண் இயந்திரம் என்றும்,...இப்படியே 10-ம் எண் இயந்திரம் வரை கண்டுபிடிக்கலாம். சரியா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ அனு, எஸ்கே, பாலராஜன் கீதா & middleclassmadhavi
ஓகே, உங்களுடைய விடையை ஏற்றுக்கொள்கிறேன்.

பாலராஜன்கீதா said...

//விடை-எஸ்கே, அனு, மற்றும் middleclassmadhavi ஆகியோர் விடையை சொல்லிவிட்டார்கள். ஆனால், ஒரு எலக்ட்ரானிக் இயந்திரம் அல்லது சுருள் தராசு (SPRING BALANCE ) பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் சொல்லவில்லை.//
உங்கள் பெயருக்கு இப்படி ஒரு பொருள் இருக்கிறதா ?
;-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ பாலராஜன் கீதா
மன்னிக்க வேண்டும், உங்கள் பெயரை விட்டுவிட்டேன். கவனமின்மை தான் காரணம்

cheena (சீனா) said...

இந்தக் கணக்கு நான் படித்த காலத்தில் வேறு ஒரு மாதிரியாக இருந்தது. 10 கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் வல்லமை உடைய 10 இயந்திரங்கள் உள்ளன. ஒரு நாள் ஏதொ ஒரு இயந்திரம் கெட்டுப் போய் 10 கிராமுக்குப் பதிலாக 11 கிராமோ அல்லது 9 கிராமோ எடை உள்ள காசுகளைத் தயாரித்தது. ஒரு எலெக்ட்ரானிக் எடை போடும் இயந்திரம் உள்ளது. அதனை ஒரே ஒரு முறை பயன் படுத்தி, எந்த இயந்திரம் தவறு செய்கிறது எனவும், அது தயாரிக்கும் காசின் எடை என்ன எனவும் கூற வேண்டும். கண்டு பிடிக்கலாம் எளிதில் .