கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Friday 4 March, 2011

நான்கு சின்ன புதிர்கள்..

நண்பர் எஸ்.கே கொடுத்த புதிர்கள்.. உங்களுக்காக. (நன்றி எஸ்.கே)

புதிர் 1:
ஷேக்ஸ்பியர் எழுதின ’Merchant of venice’ அப்படிங்கிற கதையில் ஹீரோயின் இளவரசி போர்ஷியா தன் கணவரை தேர்ந்தெடுக்கிறதுக்காக ஒரு போட்டி வச்சாங்க. போட்டி என்னான்னா, தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று வித உலோகங்களில் செய்யப்பட்ட பெட்டிகள் இருக்கும். ஒரு அழகான படம் அந்த மூன்று பெட்டிகளில் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டி மேலேயும் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கும். அதை வைச்சு படம் எந்த பெட்டியில இருக்குன்னு கண்டுபிடிக்கனும்.

முதல் சுற்று:

இந்த சுற்றுக்கு இளவரசி கொடுத்த க்ளூ. பெட்டிகள் மேல எழுதியிருக்கிற குறிப்புகள் மூன்றில் ஒன்று மட்டும்தான் சரியானது.

இரண்டாவது சுற்று:
இந்த சுற்றுக்கு இளவரசி கொடுத்த க்ளூ. பெட்டிகள் மேல எழுதியிருக்கிற குறிப்புகள் மூன்றில் ஒன்றாவது தவறானதாக இருக்கும்.

1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?
2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

புதிர் 2:

ஒரு பழங்காலப் பொருட்கள் விற்கும் கடையில் திருட்டுப் போய் விட்டதாக, கடையின் உரிமையாளர் ராம்சாமி துப்பறியும் போலீஸ் ரமேஷை அழைத்தார். A, B, C என்ற மூன்று திருடர்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை விசாரணக்கு அழைத்தார் ரமேஷ். அவர் தன் கடுமையான விசாரணைக்குப் பின் சில உண்மைகளை கண்டறிந்தார்.

1. சம்பவம் நடந்த அன்று A, B, C மூன்று பேருமே கடைக்கு வந்து போயுள்ளனர். வேறு யாரும் அன்று கடைக்கு வரவில்லை.
2. A எப்போது திருடப் போனாலும் ஒரே ஒரு துணையுடன் தான் திருடப் போவான். தனியாகச் செல்ல மாட்டான்.
3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.
4. குற்றவாளிகள் இரண்டு பேர் என்றால் அதில் நிச்சயம் A ஒருவராக இருப்பார்.
5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.

யார் உண்மையான குற்றவாளி(கள்)?

புதிர் 3:

வெங்கட் ஒரு குதிரையை வளர்த்தார். அவர் தன் குதிரை பற்றி செல்வா, அருண், ரமேஷ் மூவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் தன் குதிரையின் நிறம் வெள்ளை, கருப்பு, சிவப்பு மூன்றில் ஒரு நிறத்தில் இருக்குமென கூறினார்.

செல்வா சொன்னது: “குதிரையின் நிறம் கருப்பாக இருக்காது”

அருண் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை அல்லது சிவப்பாக இருக்கும்”

ரமேஷ் சொன்னது: “குதிரையின் நிறம் வெள்ளை”

அப்போது வெங்கட் சொன்னார் ”நீங்கள் மூவர் சொன்னதில் ஒருவர் சொன்னது தப்பு ஒருவர் சொன்னது சரியானது.”

அப்படியானால் வெங்கட்டின் குதிரையின் நிறம் என்ன?

புதிர் 4:

ஒருவர் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அது யார் படம் என கேட்டதற்கு,
“இது என் அப்பாவின் ஒரே சகோதரியின் அண்ணன் பேரனின் தந்தையின் அப்பா” என்றார். அவருக்கு சகோதரர்கள் யாரும் இல்லை.
அப்படியானால் படத்திலிருப்பவர் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன உறவு வேண்டும்?
=============================

இந்தப் புதிர்களுக்கான விடைகள் அனைத்தும் இந்தப் பதிவில் வெளியிடப் பட்டுவிட்டன. பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி! சரியான பதில் சொன்னவர்களுக்கு வாழ்த்துகள்!

21 comments:

எஸ்.கே said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புதிர் 1:
வெள்ளிப் பெட்டியை திறந்து பார்க்க வேண்டும்.

சரியாக இருந்தால் உள்ளே படம் இருக்காது.
அப்போ மற்ற இரண்டும் தவறாக இருக்க வேண்டும், எனவே இரும்புப் பெட்டியில் தான் படம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை தவறாக இருந்தால், படம் அதிலேயே இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீதி நாளைக்கு வந்து ட்ரை பண்றேன் மாதவன்... முடிச்சிட வேண்டாம்!

Jayadev Das said...

புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி அல்லது இரும்பு பெட்டி

2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி பெட்டி

புதிர் 2:

\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.

5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\
ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.

புதிர் 3:

மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?

புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். AB யோ, AC யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.

பெசொவி said...

//Madhavan Srinivasagopalan said...
பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது..

//

என்னைத் தவிர ஹிஹி!

பெசொவி said...

நான் பதில் சொல்லிடுவேன், இருந்தாலும் மத்தவங்களும் சொள்ளட்டுமேன்னு................ஹிஹி!

பெசொவி said...

@ பன்னிகுட்டி
முதல் இரண்டு புதிருக்கு எந்தப் பெட்டியையும் திறந்து பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது என்று நினைக்கிறேன்,

பெசொவி said...

//A, B, C என்ற மூன்று திருடர்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை விசாரணக்கு அழைத்தார் ரமேஷ்//

இங்க ரமேஷ்ன்றது நம்ம சிரிப்பு போலீஸ் தானே?
எப்படியும் திருடர்களிடமிருந்து மாமூல் வாங்குவார் என்பதால், ரமேஷ் தான் குற்றவாளி!
:)

Jayadev Das said...

புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி அல்லது இரும்பு பெட்டி

2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?

வெள்ளி பெட்டி

புதிர் 2:

\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.

5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\
ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.

புதிர் 3:

மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?

புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

Jayadev Das said...

Why are you blocking my comments? I have not used bad words, there is no enmity between you and me, and yet why are doing this? If you give the reason, I may not write comments and waste my time. Be a gentleman, Yar, don't use third class dishonest means and run the blog.

Dinesh said...

புதிர் 1:
முதல் சுற்று:
வெள்ளி அல்லது இரும்பு பெட்டியில்

இரண்டாவது சுற்று:
இரும்பு பெட்டியில்

புதிர் 2:
A,B,C மூன்று பேரும் குற்றவாளிகள்

புதிர் 3:
சிவப்பு

புதிர் 4:
அவருடைய படத்தை - பார்த்துக்கொண்டிருந்தார்.

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
அனு said...

1. a) தங்கப் பெட்டி
1. b) தங்கம் or வெள்ளிப்பெட்டி

2. (யோசிச்சு சொல்றேன்)

3. சிவப்பு

4. அப்பா

Madhavan Srinivasagopalan said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ பன்னிகுட்டி
முதல் இரண்டு புதிருக்கு எந்தப் பெட்டியையும் திறந்து பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது என்று நினைக்கிறேன், //

ஹி.. ஹி.. அது Obvious, So சொல்லலை..
ஆமாம்.. எந்தப் பெட்டியையும் திறந்து பாக்கக் கூடாது..?

Pranavam Ravikumar said...

நல்வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த மாதிரி ஒரு ப்ளாக் வச்சுருக்கீங்கன்னு முன்னாடியே சொல்றது கிடையாதா? எனக்கு கோவமா வருது நிறைய மிஸ் பண்ணிருக்கேன் போல...! ஊருக்கு வந்து வச்சிக்கிறேன் இருங்க இருங்க...!

Madhavan Srinivasagopalan said...

இதில் கலந்து கொண்டு பதில் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்..

நண்பர் ஜெயதேவ் :
ஒருவர் சொல்லிய பதிலை வெளிப் படுத்தினால் மற்றவர் யோசிக்க தடங்கல் ஏற்படுத்தும். அதனால் பதில்களை மட்டருத்துகிறோம்.

மேலும் இந்த வலைமனையின் உரிமையாளர் 'பெயர் சொல்ல விருப்பமில்லை'.
நான் பதிவு எழுதி போஸ்ட் செய்ய மத்துஎ உரிமை பெற்றவன். நண்பர் பெ.சோ.வி, அடிக்கடி தற்போது வலைமனைக்கு வருவதில்லை.. எனவே அவர் பதிலல்லாத பின்னூட்டத்தினை அடிக்கடி பார்ப்பதில்லை. எனவே உங்கள் கருத்துக்கள் (பதில் தவிர) உடனுக்குடன் வலையேற்றப் பட வில்லை.

பதில்களை புதிய பதிவாக சொல்லி இருக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

பிரியமுடன் வசந்த்..
தங்கள் கோவம் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேன்மேலும் பல புதிர்கள் இங்கு பதிவு செய்யக்கூடும்.. உங்கள் திறமையை நீங்கள் வெளிப்பட்த்தலாம்.
உங்களிடம் புத்திகள் இருந்தாலும் அதனை எனகளுக்கு அனுப்பினால் வெளியிடுறோம்.

மிகுந்த நன்றி அனைவருக்கும்.