கணக்கு போடலாமா?

வித்தை தெரிந்தால், நீங்களும் புலியே!

Sunday, 26 December 2010

பி.எப். வட்டி கணக்கிடப்படுவது எப்படி?

அநேகமாக எல்லோருக்குமே பி.எப். எனப்படும் சேம நல  நிதி திட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கும். இதில் நாம் போடும் பணத்துக்கு வட்டி எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

நீங்கள் ரெக்கரிங் டெபாசிட் பற்றி அறிந்திருக்கலாம். இதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வங்கியில் செலுத்தி ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களுக்கோ பிறகு வட்டியோடு பணத்தைத் திரும்பப் பெறலாம். அதே போல், ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதாமாதம் பி.எப்.பில் போடுகிறோம். தற்போது பி.எப்.புக்கு 9.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது எப்படி கணக்கிடப் படுகிறது என்று இப்போது பார்ப்போம்.

ஒரு நபர் சம்பளத்திலிருந்து மாதா மாதம் 4000 ரூபாய் பி.எப்.புக்காக பிடித்தம் செய்யப் படுகிறது எனக் கொள்வோம். 2010 மார்ச் 31-ந்தேதி அன்று 200000 ரூபாய் இருப்பில் இருக்கிறது எனக் கொண்டால்

ஆரம்ப இருப்பு                                                                        200000
(அரசாங்கத்தில் மார்ச் மாத சம்பளம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் வழங்கப் படுகிறது என்பதால், மார்ச் முதல் பிப்ரவரி வரையிலான பிடித்தங்களுக்குத்தான்  வட்டி கணக்கிடப் படுகிறது)
    இப்பொழுது வட்டி எப்படி கணக்கிடவேண்டுமென்றால்,
2912000 x 9.5 / 1200 =  23053.33 அதாவது 23053 ரூபாய் 

ஆக, 2010-11 ம் ஆண்டிற்கான உங்கள் பி.எப். கணக்கு இப்படி இருக்கும்.

ஆரம்ப இருப்பு                                200000
வருடத்துக்கான வரவு                  48000
வட்டி                                                     23053  
மொத்த இறுதி இருப்பு                 271053


இப்படி கணக்கிடுவதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு வேளை, இடையில் உங்கள் பிடித்தம் கூடவோ குறையவோ செய்தால், அதற்கேற்றாற்போல் மேலே கண்ட அட்டவணையை மாற்றி உங்கள் பி.எப் பணத்தைக் கணக்கிடலாம். 


டிஸ்கி: மதிய அரசு ஊழியர்களுக்கான பி.எப் வட்டி எட்டு சதவீதம் மட்டுமே! அப்பொழுது இந்த கணக்கீடு, 2912000 x 8 / 1200 = 19413.33 அதாவது 19413 ரூபாய் மட்டுமே 

7 comments:

எஸ்.கே said...

super!

I have one doubt how to find flat interest and interest rate for loans?

பெசொவி said...

@ எஸ்.கே

Can u elaborate ur question?

எஸ்.கே said...

அதாவது வங்கிகளில் தனிநபர் லோன்கள் அளிக்கப்படுகிறது அதை EMIஆக செலுத்தும்போது எப்படி வட்டி கணக்கிடப்படுகிறது? வட்டி வீதத்தை கணக்கிடுவது எப்படி?

பெசொவி said...

@ எஸ்.கே

நல்ல கேள்வி. இது குறித்து ஒரு பதிவு வெளியிடப் படும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/wednesday.html

ரசிகன் said...

Salary slip ஐ பிரித்துப்பார்க்காமல் packetல் வைத்துக்கொள்ளும் என் போன்றவர்களுக்கு நிச்சயம் உபயோகமான பதிவு. இனி வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சியுடன் நன்றிகள் சார்.

Madhavan Srinivasagopalan said...

I think 9.5 % is for EPF (employees profident fund).

For PPF (this a/c is available in banks) & GPF (for salaried class) the interest rate is 8 %.